1031. § | உலக மக்கள் எத்தனையோ தொழில்கள் செய்தாலும் உலகம் உழவர் தரும் பயிரைச் சார்ந்தே இருக்கின்றது. எனவே பயிரிடுதல் கடினமானதாய் இருப்பினும் அதுவே தலையாய தொழிலாகும்.§ |
1032. § | உழவை மேற்கொள்ள முடியாது பிற தொழில்களைச் செய்வாருக்கு அது ஆதரவாய் இருப்பதால் உழவர் உலகத்தாருக்கு அச்சாணி போல்வர்.§ |
1033. § | பயிர் விளைத்து வாழும் மக்கள் தாமே சுதந்திரமாய் வாழ்வார். ஏனையோர் உயிர் வாழ்வதற்கு உழவரைச் சார்ந்தே இருப்பர்.§ |
1034. § | தானியம் மிக விளையும் வயல்களை உடையோர் தம் நாடு பிற தேசங்களிலும் மேலானதாக இருக்கக் காண்பர்.§ |
1035. § | தமே பயிர் செய்து உண்டு வாழ்வோர் பிறரிடம் இரந்து கேட்கவும் மாட்டார், கை நீட்டி இரப்பார்க்கு மறுக்கவும் மாட்டார்.§ |
1036. § | பயிர் செய்வோர் தம் தொழில் செய்யாது கை மடக்கி சும்மா நின்றால் விருப்பு வெறுப்பு அற்ற துறவிகளும் தொடர்ந்து வாழ முடியாது.§ |
1037. § | பயிர் செய்யும் மண் நான்கில் ஒன்றாகப் பொடிந்து சுருங்கும்படி நன்றாக உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும் தேவைப்படாமல் விளைச்சல் செழிப்பாக இருக்கும்.§ |
1038. § | வயலை உழுதபின் எரு இடுவதும், களை பிடுங்கி நீர் பாய்ச்சிய பின் பயிரைக் காவல் செய்து வருவதும் மிக நல்ல பயன் தரும்.§ |
1039. § | வயலின் சொந்தக்காரன் தன் வயல்களைச் சென்று பார்த்துக் கவனித்து வரா விட்டால் அவை புறக்கணித்த மனைவி முகஞ் சுளித்து இருப்பது போல் தரிசாகி விடும்.§ |
1040. § | நாம் வறியவர் என்று சொல்லி சோர்ந்து இருக்கும் சோம்பேறிகளின் மடைமை கண்டு நிலமகள் சிரித்துக் கொள்வாள்.§ |