931. § | வெற்றி கிட்டினும் சூதாடாது விடுக. ஏனெனில் வெற்றிப் பரிசின் விளைவு இரை மறைத்த தூண்டிலை மீன் விழுங்குவதைப் போலும்.§ |
932. § | ஒரு தடவை வெல்ல நூறு மடங்கு இழந்து சூதாடுவோர் இன்பமாக செல்வச் செழிப்புடன் வாழும் வழி எப்படி?§ |
933. § | ஓயாது தாயம் உருட்டிப் பந்தயம் பிடிப்போர் சொல்வமும் அவர் எதிர்பார்க்கும் வருவாயும் எங்கோ போய் அழிந்து விடும்.§ |
934. § | துன்பங்கள் பல தந்து நற்பெயருக்கு இழிவு தரும் சூதாட்டம் போல் வேறு எதுவும் மானிடரை அவ்வளவு கொடிய வறுமையில் தள்ளாது.§ |
935. § | சூதாடும் வட்டு, அரங்கு, அதிர்ஷ்ட்டத்தால் தனக்கு வரப்போகும் வெற்றி என்று இவற்றின்மேல் மோகம் கொண்டு எல்லாம் வெல்ல நினைப்பவர் முடிவில் எல்லாமே இழந்து நிற்பர்.§ |
936. § | சூதாட்டம் என்பது துரதிர்ஷ்டத்துக்குப் பிற ஒரு பெயர். அதற்குள் அகப்பட்டு உழல்வோர் வறுமையால் வாடுவர். உள்ளத்தை வருத்தும் கவலைகளுக்கும் ஆளாவார்.§ |
937. § | சூதாட்டக் கூடங்களில் காலங்கழித்தல் தொன்று தொட்டு வந்த செல்வத்தையும் நற்பண்பையும் கெடுத்து விடும்.§ |
938. § | சூதாட்டம் செல்வத்தைச் சுருக்கி, நேர்மைக்கு இழுக்கேற்றி, இரங்கும் இயல்பைக் குறைத்துத் துன்பத்தைப் பெருக்கிவிடும்.§ |
939. § | சூதாட்டத்தால் வரும் நிலைபெறாத பலன்களை நாடுவோரை உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி எனும் ஐந்தும் கை கூடா.§ |
940. § | சூதாட்டத்தில் பொருள் இழக்க இழக்க மேலும் அதில் ஆசை பெருகுவது போல் துன்பத்தில் வருந்த வருந்த உயிர் மேல் இன்னும் ஆசை உண்டாகும்.§ |