Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பகைமாட்சி

861. §

வலியாருடன் பகைத்துக் கொள்ளுத்தலைத் தவிர்த்து, வலிமையற்றாரை எதிர்ப்பதைத் தொடர்ந்து மேற் கொள்க.§

862. §

அன்பில்லாதவன் தன் வலிமையோ, கூட்டுத் துணையின் வலிமையோ இல்லாமல் தன்னை எதிர்த்து வரும் பகைவரை எவ்வாறு வெல்வான்?§

863. §

அச்சம், அறியாமை கொண்டு சினேக மனப்பான்மையும் பிறருக்குக் கொடுத்து உதவும் நல்ல குணமும் இல்லாதவன் பகைவனால் எளிதில் தோற்கடிக்கப் படுவான்.§

864. §

கோபம் மிக்கவனாகவும் மனதை அடக்கி ஆளும் குணமற்றவனாகவும் உள்ளவனை எப்பொழுதும் எந்த இடத்திலும் எல்லாரும் வெற்றிபெறுதல் எளிது.§

865. §

நல்ல நடத்தை, மனச்சாட்சி, இரக்கம், பண்புள்ள ஒழுக்கம் எனும் இலட்சணங்கள் இல்லாதவனை வெல்லப் பகைவனுக்கு இன்பம் கிட்டும்.§

866. §

கடுஞ்சினமும், பேராசையும், அளவு மீறிய காமமும் நிறைந்த கயவர்களின் பகைமை விரும்பத் தக்கது.§

867. §

ஓரு முயற்சியைத் தொடங்கிவிட்டு அறியாமையால் அதற்கு அழிவு உண்டாக்குவோர் பகைமையைப் பொருள்மிகக் கொடுத்தும் பெற்றுக் கொள்க.§

868. §

ஓருவனுக்கு நற்குணங்கள் சிறிதும் இல்லாமல் தீய குணம் பல இருந்தால் உறுதுணையாக எவரும் இரார், இது அவன் பகைவர் வெற்றி கொள்ளஅதிக வாய்ப்பு கொடுக்கும்.§

869. §

அறிவில்லாதவராகவும் அஞ்சுபவராகவும் பகைவர் இருத்தலைக் கண்டால், அவரைப் பகைத்தவருக்கு வெற்றிக் களிப்பு கிடைப்பது உறுதி.§

870. §

நீதி நூல் கல்லாது சினமும் கொண்ட பகைவனை எதிர்த்து வெற்றி கொள்ளும் எளிய செயலும் செய்யாதவர்க்குப் புகழ் என்றும் கிட்டாது.§