551. § | தன் குடிகளைத் துன்புறுத்தி நீதிநெறி தவறி ஆட்சி செய்யும் அரசன் கொலையாளியினும் கொடியவனாவான்.§ |
552. § | செங்கோல் தாங்கும் மன்னன் நன்கொடை வேண்டுதல் வேல் தாங்கும் வழிப்பறிக் கள்ளன் உடைமைகள் யாவற்றையும் தா என அச்சுறுத்தலுக்கு ஒப்பாகும்.§ |
553. § | தினமும் தன் நாட்டில் நடக்கும் தீமைகளை விசாரித்து நீதி வழங்காத மன்னனுடைய நாடு நாளடைவில் மெல்லமெல்ல வளம் கெட்டு அழிந்துவிடும்.§ |
554. § | வருங்கால விளைவுகளைக் கருத்திற் கொள்ளாது நீதிநெறி தவறிக் கொடுங்கோல் செலுத்தும் மன்னன் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் சேர்த்தே இழந்து விடுவான்.§ |
555. § | மன்னனின் கொடிய ஆட்சியைத் தாங்கவொண்ணாது மக்கள் சொட்டும் கண்ணீர் அவன் செல்வத்தை அழிக்கும் சக்தியன்றோ?§ |
556. § | முறைதவறாது செங்கோல் செலுத்தும் மன்னன் நெடுங்காலம் நிலைத்திருப்பான். அஃதின்றி நீதிநெறி தவறின் அவன் மாட்சிமை நிலைபெறாது குன்றிவிடும்.§ |
557. § | மழை முறைதவறாது பெய்யாவிடின் உலகில் வறட்சி நிலவுவது போல் கருணை உள்ளம் இல்லாத மன்னன் ஆட்சியில் மக்கள் துன்பத்தில் அழுந்துவர்.§ |
558. § | நீதிநெறி தவறி அரசாளும் மன்னனின் குடைக்கீழ் வாழ்பவருக்கு வறுமையிலும் பார்க்க அவர் செல்வத்தைம் குறைந்தே சுகம் தரும்.§ |
559. § | அரசன் முறை தவறி ஆட்சி செலுத்துவானாயின் பருவகாலங்கள் பிழைத்து மழை உரிய காலத்தில் பெய்யாது தவறி விடும்.§ |
560. § | மக்களின் காவலனாகிய அரசன் காக்கும் தொழிலைக் கைவிடுவானாயின் வேதங்களை ஓதும் அந்தணர் வேதநூல்களை மறந்து விடுவர், பசுக்கள் பால் வழங்காது விட்டுவிடும்.§ |