341. § | ஒருவன் எவ்வெப் பொருளினின்றும் பற்று நீக்கினானோ, அவ்வப் பொருளால் வரும் துன்பம் அவனுக்கு இல்லையாம்.§ |
342. § | இவ்வுலகில் உலகப்பற்றை முற்றாகத் துறந்தபின்பே பெருமகிழ்ச்சி உண்டாகும். இதனைப் பெற விரும்புவோர் இளமையிலே துறவு பூணுதல் வேண்டும்.§ |
343. § | ஐம்புலன்களை முற்றாக அடக்குதல் வேண்டும். அவற்றினால் வரும் பற்றுக்கள் யாவும் உடன் கை விடப்படல் வேண்டும். § |
344. § | பரதேசிக்கு உடைமை எதுவுமே இல்லை, பற்று ஏதும் இருப்பின் அவன் மீண்டும் மாயை வலையிற் சிக்குவான்.§ |
345. § | மறுபிறவி தவிர்க்க முயல்பவனுக்குத் தன் உடம்பே பாரமாயிருக்க, அவன் அற்பமானவற்றில் ஈடுபாடு கொள்வது ஏனோ? § |
346. § | நான் என்றும் எனது என்றும் என இருவகைப் பற்றை நீக்கியவன் தேவர்க்கும் மேலான வீட்டின்பம் பெறுவான்.§ |
347. § | பற்றுக்களைக் கை விடாமல் அவற்றில் ஈடுபாடு காட்டுபவனை அவற்றினால் வரும் துன்பங்கள் அவனை விடாது பற்றிக் கொள்ளும்.§ |
348. § | பற்றுக்களை முற்றும் துறந்தவர் உயர்வு மிக்க வீடு பேறடைவர். பற்றுச் சிறிதேனும் உள்ளவர் மீண்டும் பிறவி வலையிற் சிக்குவர்.§ |
349. § | பற்றுக்கள் யாவற்றையும் அறுத்திட பிறப்பு அற்று விடும். இன்றேல். பிறப்பு இறப்பால் வரும் நிலையாமை உணரப்படும்.§ |
350. § | உலகப் பற்றுகள் யாவற்றையும் அறுக்க வேண்டுமாயின், எவ்வகைப் பற்றுமில்லா இறைவனைப் பற்றுக.§ |