261. § | தமக்கு வருந் துன்பங்களைச் சகித்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவத்துக்கு இயல்பு.§ |
262. § | இயல்பாக நன்னெறியிற் சென்றவர்களே தவம் மேற்கொள்ளல் கூடும். அப்படி இல்லாதவர் தவம் செய்ய முற்படுவது வீண்.§ |
263. § | தவம் செய்கின்றவருக்கு வேண்டுவன கொடுத்து உதவுதற்காகவே இல்லறத்தார் தவம் செய்யாது இருக்கின்றனரோ?§ |
264. § | பகைவர்களை ஒழித்தலும் நண்பர்களை வளர்த்தலும் தவம் செய்வாரின் தவ பலத்தாற் கைகூடும்.§ |
265. § | தவத்தால் தாம் விரும்பியவற்றைத் தவறாது பெற முடியுமென்ற நம்பிக்கையால் இவ்வுலகில் மனிதர் தவம் செய்தலை விடாது முயல்கின்றனர்.§ |
266. § | தவம் செய்பவரே தம் கர்ம வினைப்படி ஒழுகுபவராவர். ஏனையோர் உலகின்ப ஆசை வலைப்பட்டு வீணாகச் செயற்படுவர். § |
267. § | நெருப்பில் உருக்கிய பொன் பேரொளி பெறுவது போல கடுமையான தவ ஒழுக்கந் தருந் துன்பத்தினால் தபசியின் ஆன்மா தூய்மையடையும்.§ |
268. § | ஒருவன் தன் தவ ஒழுக்கத்தால் ஆன்மஞானம் பெற்றவனாக அவனை மற்றெல்லா உயிர்களும் வணங்கும்.§ |
269. § | தம்மை வருத்தித் தவ ஒழுக்கத்தில் ஈடுபட்டுப் பெற்ற ஆற்றலினால் தபசியர் மரணத்தையும் வெல்லக் கூடியவராவர்.§ |
270. § | விரதம் அனுட்டிப்பவரும் தீமை இழைக்காதவரும் ஒருசிலராகவும் அவ்வாறு ஒழுகாதார் பலராகவும் இருத்தலினால் பலர் ஆன்மஞானம் அற்றவராய் வருந்துவர்.§ |