1061. § | ஒருபோதும் மறுக்காது களிப்புடன் கொடுக்கும் உயர் குணமுடையாரிடத்தும் பிச்சை கேட்பதை விடக் கேட்காமல் விடுதல் கோடி மடங்கு நல்லது.§ |
1062. § | மக்கள் பிச்சை எடுத்தே வாழ வேண்டும் என்பது இவ்வுலகைப் படைத்தவன் விருப்பமாய் இருந்தால், அவனும் இரப்பாரைப்போல் அலைந்து கெட வேண்டும் என்று மனிதர் நினைக்க இடமுண்டு.§ |
1063. § | வறுமையால் வந்தத் துன்பத்தைப் பிச்சை எடுத்துத் தீர்ப்போம் என்று எண்ணி முயற்சி செய்யாது இருத்தலிலும் அறியாமை வேறில்லை.§ |
1064. § | வறுமை வந்து உறுத்தும் வேளையும் பிச்சை கேட்காத நல்ல மக்களின் பண்பு, உலகினுள் அடங்க முடியாத சிறப்பு உடையதாகும்.§ |
1065. § | தன் உழைப்பால் கிடைத்தது கஞ்சிதான் எனினும் அதைவிட இனியது வேறு எதுவும் இல்லை.§ |
1066. § | கேட்பது பசுவிற்கு நீர் ஆனாலும் அவ்வாறு இரந்து கேட்டுப் பெறுவதை விடப் பெரிய மானக் கேடு வேறு எதுவுமில்லை.§ |
1067. § | பிச்சை கேட்க வேண்டிய நிலைமை எற்படின், உலோபிகளிடம் பிச்சை கேட்க வேண்டம் என்பதே எனது வேண்டுகோள்.§ |
1068. § | பிச்சை என்னும் வலிமையற்ற தோணி மறுத்தல் எனும் கற்பாறையில் மோத உடைந்து விடும்.§ |
1069. § | பிச்சை வேண்டுவோரைக் கண்டால் நல்லவர் மனம் உருகும். இருப்பதை இல்லை என்பாரைக் கண்டால் நெஞ்சு கல்லாகி விடும்.§ |
1070. § | இல்லை என்றதும் இரந்து நிற்பவர் உயிர் நீங்கி விடும் என்பது அறிந்தும் இருப்பதை இல்லை என்பார் உயிர் எங்கு தான் ஒளிந்து நிற்குமோ?§ |