1051. § | பிச்சை கேட்க வேண்டுமானால் பொருள் உள்ளவரைக் கேட்க. அவர் இல்லை என்று மறுத்தால் பழி அவரையே சாரும். கேட்பவரை அன்று.§ |
1052. § | இரந்து கேட்ட பொருள், கொடுப்பவர் மனம் கோணாது கொடுத்தால் பிச்சை கேட்பதுமே இன்பம் தர வாய்ப்பு உண்டு.§ |
1053. § | கடமை அறிந்து இல்லை என்று சொல்லாதாரிடம் பிச்சை கேட்பதும் வறியோர்க்கு அழகாகும்.§ |
1054. § | இரந்தவர் வேண்டுவதை கனவில் கூட மறுக்காதவர் இருக்கின்றனர். அவரிடம் பிச்சை கேட்பது பிறருக்குக் கொடுப்பதற்குச் சமமாகும்.§ |
1055. § | தம்மிடம் உள்ளதை இல்லை என மறுக்காதவர் இவ்வுலகில் இருப்பதாலே அவர் முன் நின்று இரத்தல் சாத்தியமாகின்றது.§ |
1056. § | உள்ளதை இல்லை என்று மறுக்கும் இழிவான பழக்கம் இல்லாதவரைக் கண்டதுமே இரப்பதால் வரும் துன்பம் அகன்று விடும்.§ |
1057. § | ஒதுக்கி இழிவாகப் பேசாமல் கொடுப்போரைக் கண்டால் பிச்சை கேட்பவர் மனது மகிழ்ச்சி அடையும்.§ |
1058. § | பிச்சை கேட்பார் இல்லையானால் பசுமை நிறைந்த இந்த உலகம் மரப்பாவைகள் இயங்கும் மேடை ஆகி விடும்.§ |
1059. § | பிச்சை கேட்டு நன் கொடைகள் பெறுவதற்கு எவருமில்லை எனில் கொடை வள்ளல்கள் எவ்வாறு புகழ் பெறுவர்?§ |
1060. § | ஒருவனது வறுமையே கொடை அளிப்பதற்குத் தக்க சான்றாக இருப்பதால் பிச்சை எடுப்பவன் கேட்பது தனக்குக் கிடைக்காத போதும் கோபங் கொள்ளல் ஆகாது.§ |