1041. § | ஒருவனுக்கு வறுமை போல் கொடியது என்ன என்று கேட்டால் வறுமை போல் கொடியது வறுமையே வேறு ஒன்றுமில்லை.§ |
1042. § | வறுமை எனும் கொடும்பாவி ஒருவன் இப்பிறவியிலும் மறு பிறவியிலும் ஒரு இன்பமும் பெறாமல் தடுத்துவிடும்.§ |
1043. § | வறுமை எனும் தீராத ஆசை தொன்று தொட்டு வந்த குலப் பெருமையையும் பேச்சின் பெருமதிப்பையும் ஒருங்கே கெடுத்து விடும்.§ |
1044. § | பெருங் குடியிற் பிறந்தவரிடத்தும் வறுமை எனும் நோய் இழிவான பேச்சையும் சோம்பலையும் கொடுக்கும்.§ |
1045. § | வறுமை என்னும் ஒரு துன்பமே பலவிதக் கொடுமைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.§ |
1046. § | சிறந்த கருத்துக்களை உணர்ந்து சீராக எடுத்துரைத்தாலும் வறியவர் கூறும் விளக்கம் பயனில்லாது முடியும்.§ |
1047. § | வறுமையில் அகப்பட்டு அறநெறியில் தவறுபவனைப் பெற்று எடுத்த தாயும் அந்நியனாகக் கருதுவாள்.§ |
1048. § | நேற்று என்னைக் கொல்லும் அளவுக்கு வந்த வறுமை இன்றும் வந்திடுமோ? என் செய்வேன்.§ |
1049. § | சுட்டெரிக்கும் நெருப்பிலும் நித்திரை செய்யலாம். ஆனால் வறுமையின் கொடுமையில் எவரும் கண்ணயர முடியாது.§ |
1050. § | ஒரு கவளம் சோறும் இல்லாதார் ஆசைகளை அறவே துறக்க வேண்டும். அல்லது அயலார் கஞ்சியையும் உப்பையும் குடிக்க வேண்டும்.§ |