1011. § | அழகிய கன்னியருக்கு இயல்பான நாணம் தவிர அதனிலும் மேலாகத் தன்னடக்கம் கொண்டு தகாத செயலுக்குநாணுவதே நாணமாகும்.§ |
1012. § | உணவு, உடை இன்னும் மற்றவை எல்லா மக்களுக்கும் பொதுவானவை. நல்லவரை ஏனையோரில் இருந்து சிறப்பாக வேறுபடுத்துவது அவருடைய நாணமாகும்.§ |
1013. § | உயிரிகள் யாவும் உடலோடு ஒட்டி நிற்கும். குற்றம் இல்லாத செம்மை என்பது நாணத்தோடு சேர்ந்து விளங்கும்.§ |
1014. § | நற்குணம் உடையோருக்கு நாணம் ஓர் அணிகலன் அது இல்லாவிட்டால் பார்ப்பவருக்கு அவருடைய பெருமித நடை ஒரு பிணி போலவே தோன்றும்.§ |
1015. § | பிறருக்கு வரும் பழியையும் தமக்கு விளையும் பழியையும் அஞ்சுபவர் நாணத்தின் இருப்பிடம் என்று உலகம் கூறும்.§ |
1016. § | உயர்ந்தவர் தம்மைக் காக்கும் வேலியாக நாணத்தைக் கொள்வரே அன்றி உலகையே தம் உடைமை ஆக்கவும் நாணத்தைக் கைவிடமாட்டார்.§ |
1017. § | நாணம் மிகுந்தவர் அதனைப் பேணத் தம் உயிரையே விடுவர், ஆனால் உயிரைக் காக்கா நாணத்தைக் கைவிட மாட்டார்.§ |
1018. § | பிறர் கண்டு நாணுவதை ஒருவன் தான் கண்டு நாணாமல் இருந்தால், அறம் அவனைக் கண்டு நாணி விலகும்.§ |
1019. § | நல்லொழுக்கத்தில் தவறுபவனின் குடும்பமே கெட்டொழியும். நாணம் இல்லாது வாழ்பவன் நல்லன எல்லாம் அழித்திடுவான்.§ |
1020. § | நாணம் அற்றார் உலகில் நடமாடுவது கயிறு கட்டி ஆட்டப்படும் மரப்பாவைகளின் போலிக் கூத்துப் போலாகும்.§ |