Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

சான்றாண்மை

981. §

தம் கடைமையை உணர்ந்து நேர்மை தவறாத நன்னெறியில் ஒழுகுபவருக்கு நல்லன யாவும் இயற்கையாகவே பொருந்தும் என்பர்.§

982. §

சான்றோர் தமது நற்குணமே தம் நலம் என்று கொள்ளுவர். வேறு எந்த நலனும் அதுபோல் நலம் என்று அவர் எண்ணுவதில்லை.§

983. §

அன்பு, நாணம், உலகாசாரம், கருணை, உண்மை எனும் ஐந்தும் நற்குணம் எனும் மண்டபத்தை தாங்கி நிற்கும் தூண்களாகும்.§

984. §

கொல்லாமையைக் கடைப்பிடிக்கச் செய்யும் சங்கற்பம் தவம் எனப்படும். பிறர் குறைகளை வெளிப்படக் கூற மறுத்தல் அதி சிறந்த நற்குணமாகும்.§

985. §

பணிவான ஒழுக்கமே வலியவரின் வல்லமையாகும். அதுவே அறிவாளிகள் தம் பகைவரின் பகையை மாற்ற உதவும் கருவியாகும்.§

986. §

தம்மில் இளிந்தவர் இடத்தும் தோல்வியை ஒப்புக் கொள்ளுதல் ஒப்பிலா நற்குணத்துக்கு உரைகல் ஆகும்.§

987. §

துன்பம் வினவித்தவருக்கும் நன்மை செய்யாவிடின் ஒப்பிலா நற்குணத்தால் வரும் பயன் யாது?§

988. §

யாவற்றையும் அறவே இழந்த வேளையும் தம் நற்குணம் உறுதியாகக் கொண்டவர் சிறிதும் மதிப்பை இழக்கமாட்டார்.§

989. §

ஊழிக்கால முடிவில் கடல்கள் கொந்தளித்துப் பெருக்கு எடுத்தாலும் ஒப்பிலா நற்குணம் உடையோர் மாறாது ஒழுக்க நெறியைக் கைப் பிடிப்பர்.§

990. §

சான்றோரின் ஒப்பிலா நற்குணம் குறைபடுமானால் இப் பேருலகமே தன் பாரத்தைத் தாங்க முடியாது.§