971. § | வாழ்வுக்கு ஒளி தருவது புகழ் பெறத் தூண்டும் ஊக்கமாகும். அது போல இழிவு தருவது எமக்கு அது வேண்டாம் எனும் பிழையான எண்ணமாகும்.§ |
972. § | உலகில் வாழும் யாவரும் பிறக்கும் போது சமமே. அதன் பின் அவருடைய மாறுபட்ட செயல்களே அவர்களிடம் காணும் வேற்றுமையையும் சிறப்பையும் சுட்டிக் காட்டும்.§ |
973. § | அற்பர் மேல் நிலையில் இருப்பினும் உயர்ந்தவர் ஆகார். பெருமைக்குரியோர் கீழ் நிலையில் இருந்தாலும் இழிந்தவர் ஆக மாட்டார்.§ |
974. § | கற்பு நெறி வழுவாத கன்னிகை போல, பண்புடைய ஒழுக்கத்தில் இருந்து தவறாது வாழ்ந்தே பெருமையைக் காக்க முடியும்.§ |
975. § | செயற்கரிய செயல்களைச் செயல் திறனோடு செய்யும் ஆற்றலைப் பெருமை உடையோர் பெற்றிருப்பர்.§ |
976. § | பெரியோரைச் சேர்ந்து அவர் போல் பெரியவர் ஆவோம் என்பது போன்ற நல்ல எண்ணங்கள் சிறியோர் மனதில் படுதல் அரிது.§ |
977. § | பெருமை தரும் உயர் நிலையை சிறுமை மனம் படைத்தோர் அடைந்தால் அது அவர் ஆணவத்தையே அதிகமாக்கும்.§ |
978. § | பெருமை மனம் படைத்தோர் பணிவுடன் நடந்து கொள்வர். சிறுமைக் குணம் உடையோர் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வர்.§ |
979. § | செருக்கு இல்லா இடத்தில் பெருமை அமைந்திருக்கும், சிறுமை தன் செருக்கை யாவருக்கும் வீண் பெருமையுடன் எடுத்துக் கூறும்.§ |
980. § | பிறரிடம் காணும் குறைகளைப் பண்பு உடையவர் எடுத்துக் கூறுவது இல்லை. சிறுமை கொண்டவர் அவை யாவற்றையும் உடனே எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுவர்.§ |