Tirukural

திருக்குறள்

மானம்

961. §

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
§

962. §

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
§

963. §

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
§

964. §

தலையின் இழிந்த மயிரிளையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
§

965. §

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
§

966. §

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
§

967. §

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
§

968. §

மருந்தோமற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
§

969. §

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
§

970. §

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
§