Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கள் உண்ணாமை

921. §

மயக்கும் மதுவை நாள்தோறும் தேடி அலையும் மாந்தர் தமக்குப் புகழையும் தேட மாட்டார் எவராலும் அஞ்சப்படவும் மாட்டார்.§

922. §

மது அருந்தாது விடுக. ஆயின் பெரியோரின் நன் மதிப்பைப் பெறவிருப்பமில்லை என்றால் குடித்துக் கொள்க.§

923. §

குடித்தவனின் வெறியாட்டம் அவன் தன் சொந்தத் தாய்க்கே தாங்கொணாக் கவலை தருமாதலின், சான்றோருக்கு அது எங்ஙனம் தோன்றும்.§

924. §

வெட்கம் என உருவகித்துக் குறிப்பிடப்பட்ட ம்ங்கை நல்லாள் மது அருந்தும் தீய பழக்கத்திற்கு அடிமையானவரைக் கண்டதும் தன் முதுகு காட்டிச் சென்று விடுவாள்.§

925. §

நல்லொழுக்கத்தைப் பேணாது அறியாமையுடன் வாழ்தலின் விளைவே தாமே விலை கொடுத்து கள்ளுண்டு மயங்குதல்.§

926. §

பலகாலும் நித்திரை செய்பவர் இறந்தவருக்கு ஒப்பாவார். இடைவிடாது மது அருந்துபவர் நஞ்சு உண்பவருக்குச் சமமாவார்.§

927. §

மதுவை மறைந்திருந்து உண்டு மயங்கித் திரிவார் கண்கள் உண்மையை வெளிக்காட்ட ஊரார் எந்நாளும் சிரிப்பதற்கு இடமளிக்கும்.§

928. §

நான் குடிப்பதே இல்லை என மறுப்பதை விட்டுவிடுக. ஏனெனில் அடுத்த முறை குடிக்கும் போது உள்ளத்தில் மறைந்திருக்கும் எண்ணங்கள் அக்கணமே உம்மைக் காட்டி விடும். §

929. §

கள் மயக்கத்தில் இருப்பவளைக் காரணம் காட்டித் திருத்த முயலுதல் நீரில் மூழ்கியவளைக் தீவிளக்கால் தேடுவதைப் போலிருக்கும்.§

930. §

குடிகாரன் தனக்கு போதை இல்லாத போது மற்றெருவன் குடிமயக்கத்தைக் கண்டும் தன் குடி மயக்கத்தால் வரும் மானக் கேட்டை ஏன் உணர்வதில்லை?§