911. § | ஒருவனின் அன்பையன்றி செல்வத்தையே நாடும் நகை அணிந்த விலைமாதரின் இனிய பேச்சு அவனுக்கு இகழ்ச்சியையே கொண்டு வரும்.§ |
912. § | தாம் பெறும் செல்வத்தின் அளவு கொண்டு அதற்கு ஏற்ப சொற்களைப் பேசும் நற்குணமற்ற விலைமாதர் தரும் சுகத்னதச் சிந்தித்து அவர்களைச் சேராது விடுக.§ |
913. § | பண்த்னத மட்டுமே விரும்பும் விலைமாது பாசாங்கு பண்ணித் தழுவுதல் இருட்டறையில் தொடர்பில்லாத பிணத்தை தழுவுவதற்குச் சமமாகும்.§ |
914. § | பகட்டாக உடுத்துப் பணம் மட்டுமே கருதும் மாதரை அருள் நாடும் மாந்தர் தொடவும் எண்ண மாட்டார்.§ |
915. § | மதி நுட்பத்தினால் சிறந்து விளங்கும் அறிவாளிகள் யாவருக்கும் பொதுவாகவுள்ள விலை மாதரின் சுகத்தை நாட மாட்டார்.§ |
916. § | அழகிய கலைகளை இழிவான முறையில் பயன்படுத்தி மக்களைக் கவரும் மாதரைத் தம் நல்ல பண்பாட்டைப் பேணி வருவோர் சேர மாட்டார்.§ |
917. § | நெஞ்சில் பிறவற்றில் கண் வைத்துத் தம் உடலை விற்கும் பொது மகளிரைத் தம் மனதை அடக்கும் அற்றல் இல்லாதவரே கட்டி அணைப்பர். § |
918. § | மாயமாலம் செய்து அணைக்கும் மகளிர், அவ்வஞ்சனையை உணர அறிவில்லாதவர்க்கு உயிர் பறிக்கும் மோகினி அவர்.§ |
919. § | அழகிய ஆபரணங்கள் அணிந்த விலைமாதரின் மென்மையான தோள்கள் எளிய மூடர் மூழ்கி மாளும் சதுப்பு நிலமாகும்.§ |
920. § | உடலால் தழுவி மனத்தால் உணர்ச்சி அற்ற இரு மனமுள்ள மாதர், மயக்கும் கள், வஞ்சகச் சூது எனும் இவை மூன்றையும் திருமகளால் விலக்கப்பட்டவரே தொடர்பு கொள்வார்.§ |