841. § | வறுமையுள் வறுமை அறிவில்லாமையே, ஏனைய வறுமையை உலகம் அதனிலுங் குறைவான வறுமையாகவே மதிக்கும்.§ |
842. § | மூடன் ஒருவன் கொடை ஒன்றை மகிழ்வுடன் கொடுப்பானாகில் அதற்குக் காரணம் அதனைப் பெறுபவனின் நல்வினையே அன்றி வேறு எதுவும் இல்லை.§ |
843. § | அறிவில்லாதவர் தாமே தமக்கு வருத்திக் கொள்ளும் துன்பத்தை அவருடைய பகைவராலும் செய்ய இயலாததாகும்.§ |
844. § | புல்லறிவு என்பது யாது என வினாவினால் அது ஒருவன் தன்னைத் தானே அறிவுள்ளவன் எனச் சொல்லித் திரியும் செருக்கு ஆகும்.§ |
845. § | அறியாதனவற்றை அறிந்தனவாகப் பாசாங்கு செய்தல் உண்மையில் ஒருவன் அறிந்தனவற்றைப் பற்றியே ஐயம் உண்டாக்கிவிடும்.§ |
846. § | உறிதியான தம் உடலை ஆடையால் மறைத்துக் கொள்ளும் மூடர் தம் அறியாமையை நீக்க முயலாது தவறான நெறி கடைப்பிடித்து ஒழுகுவராவார்.§ |
847. § | புல்லறிவாளன் தனக்குக் கிடைக்கும் அரிய உபதேசங்களை ஏற்கத் தவறுவதால் தானே தனக்கு வருந் துன்பத்துக்குக் காரணமாவான்.§ |
848. § | பிறர் சொல்லையும் கேட்காது தானே செய்ய வேண்டியதையும் உணராது இருப்பவன் உயிர் அவன் உடலை விட்டு நீங்கும் வரையும் ஒரு நோயாகவே இருக்கின்றது.§ |
849. § | அறிவில்லாதவன் தான் கண்டு அறிந்தவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அவனுக்கு உண்மையை அறிவிக்க முயல்கின்ற எவனும் தானே அறிவில்லாதவன் ஆகிறான்.§ |
850. § | உலகம் மெய் எனக் கண்டதைப் பொய் என எடுத்து உரைப்பவன் உலகில் ஒரு பேய் என எண்ணப்படுவான்.§ |