831. § | பேதைமை என்பது என்ன என்று கேட்டால், கேடு தரும் தீயவை வைத்துக் கொண்டு பயன் தரும் நல்லனவற்றை எறிந்து விடுதலாகும்.§ |
832. § | செய்யத் தகாதன என விலக்கபட்டவற்றை விரும்பிச் செய்வதில் மகிழ்ச்சி காணுவதே மடமையுள் மடமையாகும்.§ |
833. § | வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமை, ஆராய வேண்டியதை ஆராயாமை, அன்புரிய இடத்து அன்பின்மை, பேண வேண்டியதைப் பேணாமை என்பன மூடர்களிடம் பொதுவாகவுள்ள நான்கு குறைகளாகும்.§ |
834. § | தான் கற்றதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லிப் பின் தான் அவ்வழியில் ஒழுகாத மூடனிலும் மேலான மூடன் வேறில்லை.§ |
835. § | மூடனானவன் அடுத்து வரும் எழு பிறப்பினும் அனுபவிக்க வேண்டிய துன்பங்களைத் தனி ஒரு பிறவியிலேயே வருத்திக் கொள்ள வல்லவனாவான்.§ |
836. § | செய்யும் வகையறியாத மூடன் ஒரு செயலை மேற்கொள்ள முற்பட்டால் அவன் தோல்வி அடைவான், மேலும் விலங்குகளால் கட்டுப்பட்டவன் போலும் நிற்பான்.§ |
837. § | மிக்க செல்வத்தை மூடன் பெறுவானாயின், அவன் குடும்பம் பசியில் வாட அன்னியர் அதனை அனுபவிப்பர்.§ |
838. § | மூடன் ஒருவன் பெறுமதி உள்ள பொருள் பெற்றால், அவன் மது அருந்திய பித்தன் போலாவான்.§ |
839. § | மூடர்கள் தம்முள் நண்பர்களாயிருத்தல் மிகமிக இனிது. ஏனெனில் அவர்கள் பிரியும் போது சற்றேனும் துன்பமிராது.§ |
840. § | அறியுள்ளோர் சபையில் மூடன் புகுதல் தூய படுக்கையில் கழுவாத கால்களை வைப்பதற்கு ஒப்பாகும்.§ |