821. § | பாசமுள்ளவர் போல் போலி வேடம் போடுவோர் நட்பு வாய்ப்புக்கிடைத்த போது ஓங்கி அடிக்க உதவும் பட்டறை போன்றதாகும்.§ |
822. § | நண்பர் போல் நடிப்பினும் உண்மையில் நண்பரல்லாதோர் உறவுநிலையில்லா எண்ணம் கொண்டிருக்கும் பேதைப் பெண்ணின்மனத்தைப் போன்று மாறிக் கொண்டே இருக்கும். § |
823. § | பற்பல நூல்களைக் கசடறக் கற்பினும் கீழ் மக்கள்நல்ல மனப்பான்மை பெற்றிருத்தல் அரிதினும் அரிது.§ |
824. § | கண்டதும் சிரித்துக் கொண்டு உள்ளத்தில் வஞ்சகஎண்ணம் உள்ளவர் நட்பை அஞ்சுதல் வேண்டும்.§ |
825. § | உமது உள்ளப் போக்கிற்கு இசையாத மனப்பான்மை உடையோர்சொற்கள் எவற்றையும் நம்பாது விட்டு விடுக.§ |
826. § | நல்ல நண்பர் போல் வாய்ச்சாலம் பண்ணினாலும் பகைவர் பேச்சின் உண்மையான தன்மை தவறாது விரைவில் வெளிப்பட்டு விடும்.§ |
827. § | முதலில் வில் வளைந்தாலும் பின் அதனால் கேடு வரும் என்பதுஉருதி போல பணிவுடன் பரிந்து நடித்தாலும் பகைவன் பேச்சைஎன்றுமே நம்ப வேண்டாம்.§ |
828. § | பணிவுடன் வணங்கும் பகைவன் கைக்குள் குத்துவாள் மறைந்துஇருக்கும். அது போல அவன் சொட்டும் கண்ணீரும் நம்பத் தகுந்தது அல்ல.§ |
829. § | புறத்தே சிரித்துப் பேசி அகத்துள் நம்மை இகழ்வாரை, அவரைப்போலவே சிர்த்துப் பேசி அவர் போலி நட்பை விட்டுவிடல் வேண்டும்.§ |
830. § | பகைவர் நண்பர் போல் நடிக்கும் காலம் வரும் போது அவரிடம்சிரித்து முகம் காட்டினாலும் உள்ளத்தில் உள்ளத்தில் அவர் உறவை ஒழித்துவிடுக.§ |