Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தீ நட்பு

811. §

மனச்சாட்சி அன்றோர் அன்பு நிறைந்தவர் போல் காட்டிக்கொண்டாலும் அவருடைய உறவு சுருங்கச் சுருங்கவே இனிமை
தருவதாய் இருக்கும்.
§

812. §

பலன் கருதி நண்பராகவும் அது இல்லாவிட்டால்மறந்திடுபவரகாவும் நடிப்போர் உறவை ஒருவர் பெற்றால் என்ன?இழந்தால் என்ன?§

813. §

பணம் பெறும் நோக்கத்தாலே நட்பு செய்யும் மக்கள், விலைமாதர்,கள்வர், யாவரும் தம்முள் ஒப்பான இயல்புடையவர். §

814. §

போர்க்களத்தில் சுமந்து வந்த வீரனை உதறித் தள்ளி விட்டுஓடிவிடும் குதிரையைப் போன்றவரின் உறவைவிடத் தனிமையேஉகந்தது.§

815. §

தாம் என்ன உதவி செய்திருப்பினும் தமக்கு உதவி தேவைப்படும்போது நின்று உதவாத கீழ் மக்களின் நட்பைப் பெறுவதிலும்இழத்தலே நல்லது.§

816. §

மூடருடன் நெருங்கிய நட்பைவிட அறிவுடையோர் பகைமைபலகோடி அளவுக்கும் மேலானது.§

817. §

பொய்யாகச் சிரித்துக் கொண்டாடுபவரின் நட்பிலும் பார்க்கபகைவரின் வெறுப்பு நூறு கோடி அளவுக்கு மேலானது. §

818. §

செய்யக் கூடிய காரியங்களைச் செய்ய இயலாதது போல் பாசாங்குபண்ணும் நண்பரின் உறவை மௌனமாகவே படிப்படியாக
விட்டுவிடுக.
§

819. §

சொல்லும் பேச்சும் செய்யும் செயலும் வேறு வேறாக உள்ளவர் உறவுகனவிலும் கசந்ததாகவே இருக்கும்.§

820. §

தனிமையில் உறவாடிப் பலர் மத்தியில் இழிவாகப் பேசுவோரைச்சிறிதளவேனும் அணுகவிடாது தவிர்த்துக் கொள்க.§