Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

நட்பு ஆராய்தல்

791. §

நட்புக்கொண்ட பின் நட்பு மாறாத நல்லவர் அந்நட்பினை விட்டு விடமாட்டார். ஆதலால் முன்பே தீர ஆராயாது நட்புக் கொள்வதிலும் மேலான கேடு வேறில்லை.§

792. §

பலமுறை பல வழியில் பரிசீலனை செய்து நிரூபிக்காத நட்பு பூண்டால் அது சாகும் வரை துன்பம் தரும்.§

793. §

ஒருவனோடு உறவு கொள்ளு முன் அவனது குணம், குடிப்பிறப்பு, குற்றங்கள், அவனுடன் கூடிய நண்பர் என்பன எல்லாவற்றையும் கவனித்து நட்பு கொள்ளல் வேண்டும்.§

794. §

நல்ல குடிப் பிறந்து அவமானம், கண்டனம் ஆகியவற்றுக்கு அஞ்சுபவர் நட்பைப் பொருளைக் கொடுத்தும் பெறல் வேண்டும்.§

795. §

குற்றத்தை உணர்ந்து அழும் அளவுக்கு பேசி பிழைகளைக் கண்டித்து நல்லனவற்றைப் போதிப்பவர் நட்பைத் தேடிப் பெற்றுக் கொள்க.§

796. §

கேடு விழைவதாலும் ஒரு நன்மையுண்டு. ஏனெனில் அது நண்பர்கள் எத்துனை விசுவாசமாக உள்ளனர் என்பதை அறிவதற்கான அளவுகோலாகும்.§

797. §

மூடரின் நட்பை நீக்கி அவரோடு உறவாடுதலையும் கைவிடுதல் ஒறுவனுக்குச் சிறண்த இலாபமே ஆகும்.§

798. §

உற்சாகத்தை மங்கவைக்கும் எண்ணங்களைச் சிந்திக்காது விடுக. அதே போல் துன்பம் வரும் போது தூர மறைபவர் நட்பை விட்டுவிடுக.§

799. §

உதவி தேவைப்பட்ட நேரம் உம்மை கைவிட்டுசென்றோர் நினைவுகள் மரணத் தறுவாயிலும் உள்ளத்தைப் புண்படுத்தும்.§

800. §

நல்லோர் நட்பை இருகப் பற்றுக. அல்லாதோரை எத்தனைக் கொடுத்தும் விட்டு விடுக.§