781. § | நட்பைப் போல் பெறுவதற்கு அரியது எது? அதுபோல் பகைவருக்கு எதிராகப் பாதுகாப்பு தருவது எது?§ |
782. § | அறிஞர்களுடன் நட்பு வளர்பிறை போல் வளரும், மூடர்களுடன் அது பூரண சந்திரன் தேய்வது போல் தேயும்.§ |
783. § | நன்நூல்களைப் படிக்கப் படிக்க சிந்தனைக்கு இனிய புதிய கருத்துகள் தோன்றும், நல்லோருடன் இணைந்த பிணைப்பு பழகப் பழக மகிழ்ச்சி தரும்.§ |
784. § | நட்புப் பூணுவது சிரித்து மகிழ்வதற்காக அன்று, நண்பன் தீய வழியில் செல்லுங்கால் முன் நின்று கடுஞ் சொல்லால் கண்டிப்பதற்கே.§ |
785. § | நட்பு நிலைத்திருக்க இடையறாது உறவாடுவதும் பழகுவதும் வேண்டியதில்லை. ஒருமித்த விருப்பங்களே இறுகச் சேர்க்கும் நட்பை அளிக்கும்.§ |
786. § | சிரிக்கும் முகம் மட்டுமே நட்பை உறுதியாகக் காட்டும் குறியன்று, அன்பின் விழைவால் வரும் உள்ளப் பூரிப்பே அதற்கு அடிப்படையாகும்.§ |
787. § | நண்பன் தீய வழியில் செல்லுங்கால் தடுத்து நல்வழிப் படுத்தி, அவனுக்குத் துன்பம் வந்துறும் போது பங்கு கொள்வதே நட்பாகும்.§ |
788. § | இடுப்பில் உடை நெகிழ்ந்தால் ஒருவன் கை உடனே சென்று காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தபோது உடனே சென்று உதவுவதே நட்பாகும்.§ |
789. § | நட்பு எனப்படுபவது எங்கு கொலு வீற்றிருக்கும் நண்பர்கள் எந்நிலையிலும்எப்பொழுதும் எவ்விடத்தும் ஆதரவு பெறும் இடமாம் அது.§ |
790. § | "இவர் எனக்கு மிக வேண்டியவர், அவ்வாறே நானும் அவருக்கு" என்று தற்பெருமையுடன் பேசுவதனால் நட்பின் சிறப்பு குன்றிவிடும்.§ |