761. § | ஒரு மன்னன் உடைமைகள் எல்லாவற்றுள்ளும் மிகச் சிறந்தது அஞ்சாது போரிட்டு வெற்றி கொள்ளும் படையே ஆகும்.§ |
762. § | போர்க் களத்தில் சிதைவு உண்டாகித் தோல்வி வருமோ என்ற நிலை ஏற்படினும் ஆற்றல்மிக்க போர் வீரர் பின் வாங்காது நின்று போர் புரிவர்.§ |
763. § | கடல் போல் சேர்ந்த பெரிய எலிக் கூட்டம் ஆரவாரம் செய்வதால் என்ன பயன்? நாக பாம்பு மூச்சு விட்டாலே அந்த ஆரவாரம் அடங்கிப் போகும்.§ |
764. § | தோல்வியோ பயந்தோடு கண்டேயிராத வீர மரபு வந்த போர் வீரர் கொண்டதே படைக்குரிய சிறப்பு ஆகும்.§ |
765. § | கொடுர மரணத்தை எதிர்நோக்க வேண்டினும் கலங்காது ஒன்று கூடி எதிர்க்கும் ஆற்றல் உள்ள படையே உண்மையில் படை எனப்படும்.§ |
766. § | வீரம், மானம், நம்பிக்கை, மரபு வழிப்படி பேணிய ஒழுக்கம் இவை நான்கும் ஒரு படையைக் காக்கும் கவசமாகும்.§ |
767. § | நன்கு பயிற்றப்பட்ட படை பகைவரை எதிர்த்துப் போராடி சுற்றிவளைத்துச் சூழ்ந்து வீராவேசத்துடன் தாக்கி முறியடிக்கும்.§ |
768. § | எதிரியை வெற்றியுடன் தாக்குந் திறனும் தாக்கப்படுங்கால் அதனைத் தாங்கும் திறனும் படைக்கு இல்லை எனினும் அதன் தோற்றப் பொலிவால் அப்படை பாராட்டப்படும்.§ |
769. § | போர் வீரர் கடமை விட்டு விலகுதலும், வறுமை, வெறுப்பு என்பனவும் இல்லாவிடின் அப்படை வெற்றிகாணும்.§ |
770. § | வீரம் படைத்த சேனைகள் பல இருப்பினும் தலைமை தாங்கிச் செலுத்தப் படைத் தலைவர் இன்றிப் பயன் எதுவுமில்லை.§ |