731. § | வளங்குன்றாத விளைவும், அறிவிற் பெரியோரும், செல்வம் மிகுந்த வணிகரையும் ஒருமித்துப் பெற்றிருப்பதே நாடு.§ |
732. § | மக்களைக் கவரும் பெருஞ் செல்வமும் நிறைந்த விளைச்சலும் பெற்று எவ்வகை அழிவும் கேடும் ஏற்படாததே நாடு.§ |
733. § | சுமையாக வரும் பலவிதப் பாரங்களையும் பொறுமையோடு தாங்கி மன்னனுக்கு உரிய வரிப் பொருள் முழுவதையும் வழங்குவதே நாடு என்க.§ |
734. § | கொடிய பசியும் தீராத நோயும் பகைவரும் இன்றி இயங்குவதே செழிப்புள்ள நாடு.§ |
735. § | வாதப் பிரதிவாதக் கட்சிகளும் தொல்லை தரும் அரசைக் கவிழ்க்கிற புரட்சிவாதிகள், கொலைக் கூட்டங்கள் எனும் இவை யாவும் இல்லாதிருப்பதே நாடு.§ |
736. § | பகைவரால் அழிவு படாததும், அவ்வாறு அழிவு எற்படினும் மீண்டும் வளம் கொழிக்கும் நாடே நாடுகளுள் சிறந்த நாடு.§ |
737. § | மழை நீர், ஊற்று நீர் எனும் இரு நீர் வளமும் பொருந்தி நீர் வற்றாத ஆறுகளும் பலம் வாய்ந்த கோட்டைகளும் ஒரு நாட்டுக்கு வேண்டிய உறுப்புகளாகும்.§ |
738. § | நோய் இல்லாமை, பொருட் செல்வம், செழிப்பான விளைச்சல் இன்ப வாழ்வு, காவல் அரண் எனும் இவ்வைந்தும் நாட்டிற்கு அழகு தருவனவாகும்.§ |
739. § | தேடி வருந்தாமல் சகல செல்வங்களையும் பெற்றிருக்கும் தேசமே நாடாகும். மிக வருந்திச் செல்வத்தைப் பெறும் தேசம் நாடன்று.§ |
740. § | மேற்கூறிய எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் மன்னனும் மக்களும் மனம் ஒத்து வாழாத தேசம் நாடன்று.§ |