Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

துன்பத்தைத் தாங்கி எதிர்த்தல்

621. §

துன்பம் வரும் போது சிரித்துக் கொள்க. அதனைப் பகைத்து வெற்றி கொள்ளவல்ல வேறெதுவுமே இல்லை.§

622. §

அலைகள் போல் வருந் துன்பங்களை உள்ளம் ஒன்றித் தளராது எதிர்த்து நிற்க அவை பின் வாங்கிச் சென்று விடும்.§

623. §

துன்பத்தைக் கண்டு வருந்தாத நெஞ்சுரம் உள்ளவர் துன்பத்துக்கே துன்பத்தை விளைவித்துக் விரட்டி விடுவர்§

624. §

மேடு பள்ளத்தில் எல்லாம் வண்டியை உறுதியுடன் இழுக்கும் எருது போல துன்பங்களுக்கு முகங் கொடுத்து நிற்பவன் முன் அத்துன்பங்களே துன்பப்படும்.§

625. §

மலை போல் துன்பங்கள் வந்து குவியினும் ஒருவரின் கலங்காத மனத் திண்மையால் அவை அழிந்து விடும்.§

626. §

என்னிடம் மிகு பொருள் உண்டு எனத் தம் செல்வத்தைப் பெருமையுடன் கூறாதவர் வறுமை வரும் போது என்னிடம் சிறிதே உண்டு எனக் கண்ணீர் சொட்டமாட்டார்கள்§

627. §

இவ்வுடல் துன்பத்துக்கே இரையாகும் என உணர்ந்து உயர்ந்தோர் துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளமாட்டார்கள்.§

628. §

துன்பங்கள் வந்து சேருதல் இயற்கையே எனவுணர்ந்து, வாழ்வின் இன்பத்தை நாடிச் செல்லாதவர் வருந் துன்பங்களால் வருந்த மாட்டார்கள்.§

629. §

இன்பம் வந்த காலத்தில் அதில் இன்பம் காண ஆசைப் படாதவன் துன்பம் வந்து அதை அனுபவிக்கும் போது வருத்தம் அடைய மாட்டான்.§

630. §

இன்பத்தையும் துன்பத்தையும் வேறு படுத்தி நோக்காதவர் பகைவருமே அஞ்சலி செய்யும் வகை சிறப்புற்று விளங்குவர்.§