571. § | கருணை நிறைந்த நோக்கு பல வகைப் பண்புகளில் தலைசிறந்த பண்பு என்பர். எங்கு எங்கு அது சிறந்தோங்குகிறதோ, அங்கெல்லாம் உலகம் தழைத்தோங்கும்.§ |
572. § | உலகம் இயங்குவது கருணை நிலை பெற்றிருத்தலால். அது இல்லாதவர் வாழ்தல் புவிக்குப் பெரும் பாரமாகும்.§ |
573. § | பாட்டுக்குப் பண் இணையாவிடின் பண்ணினால் வரும் பயன் என்ன? காருண்ணிய நோக்கில்லாவிடின் கண்கள் தரும் பயன் என்ன?§ |
574. § | முகத்திற்கு உண்மையில் அணிகலன் ஆவது கருணை காட்டும் கண்களே. கருணை இல்லையேல் கண்கள் இரண்டு புண்களே.§ |
575. § | காருண்ணிய நோக்கே கண்ணிற்கு உண்மை அணிகலம். அஃதின்றேல் கண்கள் வெறுப்பு தரும் புண்களேயாம்.§ |
576. § | இரக்கம் இரண்டறக் கலந்த கண்கள் இல்லாதவர் மண்ணோடு வேர் ஊன்றி அசையாத அடிமரக் கட்டைக்குச் சமமாவர்.§ |
577. § | காருண்ணிய நோக்கில்லாதவர் உண்மையில் கண்களில்லாதவரே. கண்கள் உள்ளவர் நோக்கில்லாதிருப்பதுமில்லை.§ |
578. § | கடமையிற் சற்றேனும் தவறாது யாவரிடமும் காருண்ணியத்தோடு பழகுபவற்கே இவ்வுலகம் உரியதாகும்.§ |
579. § | தம்மைத் துன்புறுத்துவோரிடத்தும் பொறுமையுடன் இரக்கங்காட்டுதல் நற்பண்புகள் யாவற்றுள்ளும் தலையானதாகும்.§ |
580. § | நஞ்சூட்டிய உணவைத் தமக்கு அளித்ததைக் கண்டும் கண்ணோட்டத்தையே கருத்தில் உடையோர் அதனை ஏற்று உண்பர்.§ |