Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

இடன் அறிதல்

491. §

எதிரியைத் தாக்கும் சூழ்ச்சிக்கு ஏற்ப உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கு முன், எச்செயலிலும் ஈடுபடுதலோ எவ்வகையிலும் இகழ்தலோ ஆகாது.§

492. §

கூடுதலான வல்லமையும் வீரமும் உள்ளவர்களுக்குமே பாதுகாப்பு நிறைந்திருப்பின் அதனால் நன்மைகள் பலவுள.§

493. §

செயலில் ஈடுபடுந்துறை பொருத்தமானதாகவும் ஏற்ற பாதுகாப்புடையதாகவும் அமையின் ஆற்றலற்றவரும் ஆற்றல் மிக்கவராய் திகழ்வர்.§

494. §

வெற்றி பெறும் நோக்கமுடையோர் தக்க காவலுள்ள இடத்தில் நின்று முற்றுகையிட்டால் அவரை வீழ்த்தக் கருதிய எண்ணமே அற்றுவிடும்.§

495. §

முதலை ஆழமான நீரில் பிறவிலங்குகளைக் கொல்ல வல்லது, ஆனால் நீரை விட்டு அது வெளிவரின் பிற மிருகங்கள் அதனைக் கொல்லும்.§

496. §

நிலத்தின் மேல் ஓடுவதற்கான பெருஞ் சக்கரங்களையுடைய பெருந்தேர் கடல் மேல் செல்ல முடியாதது போல், கடல் மீது செல்லும் கப்பலும் நிலத்தின்கண் செல்ல முடியாது.§

497. §

எல்லாவற்றையும் முற்றுமுழுதாகச் சிந்தித்துப் பொருத்தமான இடத்தில் நின்று செயலாற்ற எண்ணுபவனுக்குச் சற்றேனும் அச்சம் இல்லாதிருக்கும் மனம்அன்றி வேறு துணை எதுவும் வேண்டியதில்லை.§

498. §

பாதுகாப்பான இடத்தில் உறுதியாக நிலை பெற்றிருக்கும் சிறிய படை மீது வலிமைமிக்க பெருஞ்சேனை படையெடுத்துச் சென்றாலும் அது தப்பாது தோல்வியுறும்.§

499. §

தறகாப்புக்கு இன்றியமையாத கோட்டைகளும் இல்லாமல் ஆற்றலிற் குறைந்த படையையே கொண்டவராயினும் தம் சொந்த நிலத்தைக் காக்கும் மாந்தரைப் பெரும் படையுடையோர் வெல்லுதல் கடினம்.§

500. §

போர்க்களத்தில் பகைவர் பலரைக் குத்திக் கொல்ல அஞ்சாத யானையின் கால்கள் சேற்றில் சிக்கி விடுமாயின் தனி ஒரு நரிதானும் அதைக் கொன்றுவிடும்.§