481. § | பகற்பொழுதில் காக்கை ஆந்தையும் வெல்லும். அவ்வாறே தன் பகைவரை வெற்றி கொள்ள விரும்பும் அரசன் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.§ |
482. § | தக்க காலநேரம் அறிந்து அதற்கு ஏற்ப செயலாற்றுதல் செல்வமானது அழிந்து போகாது கட்டி வைக்கும் கயிறு போன்றதாகும்.§ |
483. § | உரிய காலத்தில் உவந்த கருவி கொண்டு எக்கருமத்தையும் பயன் தரும்படி செய்பவர்க்கு செய்வதற்கு அரிதான பணி எதுவும் உளதோ?§ |
484. § | தக்க காலமும் பொருத்தமான இடமும் அறிந்து செயலாற்றின் உவகத்தையே பெற விரும்பினும் அது கட்டாயம் கைகூடும்.§ |
485. § | இவ்வுலகையே தமதாக்க விரும்புவோர் மனங்கலங்காது தக்க தருணம் பார்த்துப் பொறுத்திருத்தல் வேண்டும்.§ |
486. § | வலிமை மிக்க மனிதன் தக்க தருணம் பார்த்துப் பொறுமையுடன் காத்திருத்தல், ஆட்டுக்கடா தன் எதிரியைத் தாக்க முன் |
487. § | தெளிவான அறிவுள்ளோர் பகைவர் தவறு செய்யினும் கடுங்கோபங் கொண்டு சீறிச் சினக்கமாட்டார். வெற்றி கொள்வதற்குத் தகுந்த காலம் வரும் வரையும் தம் கோபத்தை உள்ளடக்கி வைத்திருப்பர்.§ |
488. § | எதிரியைச் சந்திக்கும் போது கோபத்தை வெளிக்காட்டாது சிரந்தாழ்த்திப் பணிவுடன் நடந்து கொள்க. காலப் போக்கில் அவர் தோல்வி கண்டு வெட்கத்துக்காளாகித் தாமே தலை குனிந்து நிற்பர்.§ |
489. § | கிடைத்தற்கரிய வாய்ப்புக் கிடைக்கும் போது செய்து முடிக்காத காரியங்களை அக்கணமே செய்து விடுக.§ |
490. § | ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரையும் பொறுமையுடன் காத்திருக்கும் கொக்குப் போன்று தக்கதருணம் வரும் போது சிரந்தாழ்த்திப் பணிவாக நடந்து கொள்க.§ |