Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

வலிமையின் தன்மை அறிதல்

471. §

எண்ணிய கருமத்தின் இயல்பும், தன் சொந்த ஆற்றல், அக் கருமத்துக்கு உறுதுணையாகவும் இடையூறாகவும் உள்ள காரியங்கள் என்பனவற்றையும் சீர்துக்கிப் பார்த்துச் செயலாற்றுக.§

472. §

தம்மால் இயன்ற செயலையும் அதற்கேற்ப இன்றியமையாத உபாயத்தையும் உத்தேசித்துச் செயற்படுவோருக்கு முடியாத காரியம் எதுவுமில்லை.§

473. §

தம்மாற்றல் அறியாது உற்சாகத்தினால் உந்தப்பட்டு ஒரு காரியம் தொடங்கிய பின் இடையில் இரண்டும் கெட்டு அவலப்பட்டவர் பலர்.§

474. §

தம்மைச் சூழ்ந்தாரோடு நட்புடன் வாழாது, தமக்குள்ள ஆற்றலையும் சரியாகப் புரியாது தம்மையே புகழ்ந்து கொள்பவர் விரைவில் மாண்டு போவர்.§

475. §

மயில் இறகாக இருப்பினும் அளவு மீறி ஏற்றினால் அதனைத் தாங்கும் வண்டியின் அச்சாணியும் ஒடிந்து விடும்.§

476. §

ஒரு மரத்தின் நுனிக் கொப்புக்கு ஏறுபவர்கள் இன்னும் மேலே ஏற எத்தனித்தால் அவர் உயிருக்கு முடிவு உண்டாகிவிடும்.§

477. §

தம் ஆற்றலை அறிந்து அதற்கியைய கொடை வழங்குக. அவ்வண்ணம் செய்தலே தம் பொருளைப் பேணுவதற்குச் சிறந்த முறையாகும்.§

478. §

வருவாய் சிறிதாயினும், அந்த அளவுக்கு மீறிச் செலவு செய்யா விடின் அதனால் எந்தக் கெடுதியுமில்லை.§

479. §

பெறும் வருவாயின் அளவை அறிந்து வாழத் தெரியாதவன் வாழ்க்கை செல்வம் உடையவன் போல் தோன்றினாலும் விரைவில் அழிந்து விடும்.§

480. §

தமக்கள்ள செல்வத்தின் நிலையைக் கவனியாது வழங்கி வந்தால் அச் செல்வம் விரைவில் அழிந்துவிடும்.§