441. § | தம்மிலும் மூத்த அறிவுள்ள பெரியார் திறமையைத் தெளிவாக உணர்ந்து அன்னாரின் நட்பைப் பெறுதல் வேண்டும்.§ |
442. § | இன்றுவரும் துன்பங்களைக் களைந்து நாளைவரும் துயரங்களிலிருந்து காப்பாற்றும் பெரியோர் நட்பைப் பெற்றுப் பேணுதல் வேண்டும்.§ |
443. § | அறிவாற்றல் மிக்க பெரியோர் நட்பைப் பெற்று அவர்களைத் தமக்குரியவராக்கிக் கொள்ளல் அரியனவற்றுள் எல்லாம் அரியது.§ |
444. § | தம்மிலும் பெரியாரோடு உறவு பூண்டு அவர் வழிப்படி நடப்பது மக்களின் வலிமைகளும் மிகச் சிறந்த வலிமையாகும்.§ |
445. § | அரசனின் அமைச்சரவை அவனுக்கு ஆட்சிபுரியக் கண்கள் போல் உதவுவதால் அவன் அவர்களை நுணுகி ஆய்ந்த பின்பே நியமித்தல் வேண்டும்.§ |
446. § | தக்கார் மத்தியில் மதிப்பும் நட்பும் பூண்டு வாழும் மன்னனுக்குப் பகைவரால் ஏற்படக் கூடிய துன்பங்கள் எவையுமில்லை.§ |
447. § | அரசனின் குற்றம் கண்டதும் கண்டித்து நேர்வழி காட்டுந் துணைவரையுடைய அரசனின் வல்லமையை அழிக்க வல்ல எதிரிகள் யாருளர்?§ |
448. § | குற்றங்களைக் கடிந்து பாதுகாப்பு வழங்குந் துணைவரற்ற அரசன் வேறு எதிரி எவரில்லை எனினும் அவன் தானே அழிந்து போவான்.§ |
449. § | மூலதனம் இல்லாத வணிகனுக்கு இலாபமில்லை. அதுபோல் நம்பிக்கையுள்ள நல்லவர் உறுதுணையாக இல்லாதவருக்கு நிலையான உறுதிப்பாடில்லை.§ |
450. § | பல்வேறு எதிரிகளை உண்டாக்குவதிலும் நல்லவரின் நட்பைக் கை விடுதல் பத்து மடங்கு கேடுதரும்.§ |