421. § | அழிவைத் தடுக்க வல்ல ஓர் ஆயுதம் அறிவு ஆகும். மேலும் அது பகைவராலும் அழிக்க முடியாத காவற்கோட்டை ஆகும்.§ |
422. § | மனத்தை அடக்கி ஆளவல்லது அறிவு, தீய வழியிற் செல்ல விடாது திரும்பி நல்ல வழியிற் செலுத்துவதும் அறிவே.§ |
423. § | எவரெவர் வாயிலிருந்தாவது என்னென்ன விடயத்தை அறியினும் அவ்வவ் விடயத்தின் உண்மைப் பொருளை அறிவானது காணும்.§ |
424. § | தாம் சொல்லுங் கருத்தை எளிதில் விளங்குமாறு தெளிவாகச் சொல்லுதலும் பிறர் சொல்லுங் கருத்தின் நுண்ணிய பொருளைக் கூர்ந்து அறிந்து கொள்ளுதலும் அறிவின் பாற்பட்டதாகும்.§ |
425. § | அறிவாற்றல் மிக்கோரை அணைத்து நண்பராக்கித் தாமரை போல் மலர்தலும் கூம்புதலுமின்றி ஒரே தன்மையராக வாழ்வது அறிவாகும்.§ |
426. § | உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறே அதனுடன் ஒத்து ஒழுகுவது அறிவுடைமை ஆகும்.§ |
427. § | அறிவுடையார் பின் நிகழ்வனவற்றை முன்னதாகவே உணர வல்லவர். அறிவிலார்க்கு அத்தகைய ஆற்றல் எத்துணையும் இல்லை.§ |
428. § | அஞ்ச வேண்டியனவற்றிற்கு அஞ்சாது பாராமுகமாயிருத்தல் மடமையாதலின் அறிவுடையோர் அஞ்ச வேண்டியனவற்றிற்கு அஞ்சி அதைத் தடுக்க முயல்வர்.§ |
429. § | பின் விளைவுகளை உய்த்துணர்ந்து அவற்றிற்குத் தக ஏற்பாடுகள் செய்வோர்க்கு அதிர்ச்சி தரக் கூடிய துன்பம் ஏதும் வாராது.§ |
430. § | அறிவுடையவர்கள் எல்லாம் பெற்ற சிறப்புடையவராவர். அறிவில்லாதவர் எல்லாம் பெற்றிருப்பினும் எதுவுமே இல்லாதவர் போல்வர்.§ |