411. § | செவிவழி கேட்டறியும் கல்விச் செல்வமே மதிப்புடையது. அச்செல்வம் மற்றெல்லாச் செல்வங்களுள்ளும் தலையானது.§ |
412. § | அறிவு தரும் கருத்துக்களைக் கேட்டறிய வாய்ப்பில்லாத வேளையில் மட்டுமே வயிற்றுக்கும் ஒரு கவளம் உணவு வழங்கப்படும்.§ |
413. § | செவிக்குணவாகிய கேள்வியறிவு பெறும் இம்மண்ணவர் வேள்வியில் அவியுணவு பெறும் விண்ணவரோடு ஒப்பர்.§ |
414. § | ஒருவன் கற்காவிடினும் கற்றோர் சொல்லைக் கேட்ட அறிவாவது பெற்றிருப்பின் அது கெடுதி வருங்கால் ஊன்று கோல் போல் உறுதி தரும்.§ |
415. § | நேர்மையுள்ள பெரியோர் கூறும் அறிவுரைகள் வழுக்கல் நிலத்தில் ஊன்று கோல் போல் உறுதி தரும்.§ |
416. § | சிறியனவாயினும் சிறந்த கருத்துக்களைப் பெரியோர் வாய்க் கேட்டுணர்க. அத்துணை கேள்வியறிவோ மிகுந்த பெருமை வளர்க்கும்.§ |
417. § | ஆழ்ந்த கல்வியறிவும் நற்கேள்வியறிவும் உடையோர் தவறாக உணர்ந்த எப்பொருள் பற்றியும் அறியாமை பயக்கும் சொற்களையும் பேசமாட்டார்.§ |
418. § | நுண்ணிய கேள்வியறிவு ஊடுருவிச் செல்லப் பெறாத செவி பிற ஒலிகளைக் கேட்பினும் அது செவிடேயாம்.§ |
419. § | கல்வி தரும் அறிவை நுணுக்கமாகக் கேட்டறிந்தவர்க்கன்றி பணிவுடன் உரையாடும் சொல் வருதல் அரிது.§ |
420. § | கேள்வியறிவுச் சுவையுணராது நாச்சுவை மட்டுமே உணருகின்றவர் இருந்தென்ன? இறந்தென்ன?§ |