361. § | எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் முடிவின்றி வரும் பிறப்பிற்குக் காரணம் அவா எனும் வித்தாகும்.§ |
362. § | ஒருவன் விரும்பத்தக்கது பிறவியிலிருந்து விடுபடுதலே, அவ்விருப்பம் எதனையும் விரும்பாது விடுவதனால் கைகூடும்.§ |
363. § | இம்மையிலே எதனையும் விரும்பாமை போன்ற அருஞ் செல்வம் எதுவுமில்லை. மறுமையிலும் அதற்கொப்பானது வேறில்லை.§ |
364. § | எப்பொருள் மீதும் ஆசையின்மையே மனத் தூய்மை எனப்படும். மெய்பொருளை விரும்புவதாலேயே அவ்வாசையின்மை கைகூடும்.§ |
365. § | ஆசை நீக்கியோரே உண்மைத் துறவியர் ஆவர். ஏனையோர் ஆசை தவிர மற்றெல்லாவற்றையும் நீக்கியிருப்பினும் துறவியர் அல்லர்.§ |
366. § | எதனிலும் மேலாக ஒருவனை வஞ்சித்து ஏமாற்றுவது அவாவே, எனவே துறவியர் அதற்கு அஞ்சி ஒழுகுவர்.§ |
367. § | அவா தருஞ் செயல்களைத் துறவி அறவே தவிர்ப்பாராயின் அவர் வேண்டியவாறு வீடு பேறு கைகூடும்.§ |
368. § | ஒருவனுக்கு ஆசை இன்றேல் துன்பம் இல்லை. ஆயின் ஆசை இருப்பின் துன்பம் இடையறாது வந்து கொண்டிருக்கும்.§ |
369. § | துன்பம் மேற் துன்பம் தரும் ஆசையை அழித்தால் இம்மையிலும் நிலைத்த இன்பம் கிடைக்கும்.§ |
370. § | ஆசை என்பது ஒருபோதும் நிறைவுறாத இயல்புடையது. ஆசையை முற்றாக ஒருவன் நீக்கிய அக்கணமே நிரந்தர ஆனந்த நிறைவடைவான்.§ |