331. § | நிலத்திராது விரைவில் அழிவனவற்றை நிலைத்திருப்பனவாகக் கொள்ளும் மடமையிலும் வேறு எவையும் இல்லை.§ |
332. § | கூத்துக் கொட்டகைக்குள் மக்கள் சேருவது போல் கை கூடுஞ் செல்வம், கூத்து முடிய கலைவது போல் விரைவில் அழிந்து விடும். § |
333. § | நிலையிலாத இயல்பினை உடையது செல்வம். சேருங்கால் நிலைத்து நிற்கும் அறத்தை உடன் செய்க. § |
334. § | ஒவ்வொரு நாளும் தீங்கற்றதாகத் தோன்றினும் அது வாழ்வெனும் மரத்தைப் படிப்படியாக அரியும் கூர்வாள் என்பதை மெய் உணர்ந்தோர் அறிவர்.§ |
335. § | நாக்கு விழுந்து சேடம் இழுக்கத் தொடங்கி உயிர் பிரியு முன் விரைவு உணர்வோடு நற்செயல்கள் ஆற்றுக.§ |
336. § | நேற்று இருந்தவன் இன்றில்லை எனும் வியத்தகு பெருமை உடையது இவ்வுலகு.§ |
337. § | தன் உடலில் அடுத்த கணம் உயிர் நிலைக்குமோ என்பதை அறியாதவன் தீட்டும் திட்டங்கள் கோடிக் கணக்கல்ல அதனினும் கூடியன.§ |
338. § | தான் வளர்ந்த முட்டையின் ஓடு வெறுமே கிடக்க, குஞ்சு பறந்து விடுவது போன்றதே உடும்புக்கும் உயிருக்குமுள்ள தொடர்பாகும்.§ |
339. § | வாழ்வில் சாதல் என்பது நித்திரை செய்தல் போன்றது, பிறப்பு என்பது நித்திரையினின்றும் விழித்தெழுதல் போன்றது.§ |
340. § | இவ்வுயிருக்கு நிலையான வீடு கிடையாமையினாலோ உடும்புகளில் ஒவ்வொன்றாகத் தற்காலிகமாக வாழுகின்றது?§ |