301. § | தன்னிலும் வலிமை குறைந்தாரிடம் சினத்தை அடக்குவதே உண்மையான அடக்கமாகும். தன் சினம் ஏனையோரைத் துன்புறுத்தாது விடின் அதனை அடக்கினாலென்ன விட்டாலென்ன.§ |
302. § | தீங்கு விளைவிக்க முடியாவிடத்தும் சினம் தீது, ஆயின் தீங்கு விளைவிக்குமாயின் அதனிலும் தீது வேறில்லை.§ |
303. § | தனக்குப் பிழை செய்தவர் எல்லோரிடத்தும் வரும் சினத்தை அடக்கிக் கொள்க. ஏனெனில், அச் சினம் பிற துன்பங்கள் பல தரும்.§ |
304. § | முகத்தில் புன்னகையையும் அகத்தில் களிப்பையும் அழிக்க சினம் வல்லதாயின் சினத்திலும் கொடிய பகை வேறெதுவும் உளதோ?§ |
305. § | ஒருவன் தன்னைக் காப்பதாயின் தன் சினத்தைக் காத்தல் வேண்டும், அவ்வாறன்றிக் காப்பது தவறின் அது அவனையே அழித்து விடும்.§ |
306. § | சினம் எனும் தீ தன்னை அணுகுவாரை தன்னுள் அமிழ்த்தி விடுவதோடு ஆபத்துக்குதவும் உறவினரையும் நண்பரையும் சுட்டெரித்துவிடும்.§ |
307. § | நிலத்தை அடிக்க முனையும் கை வலியால் துன்புறுவது போல, சினத்தைப் பெரிதாக மதிப்பவன் நிச்சயம் கெடுவான்.§ |
308. § | சுட்டெரிக்கும் பல தீப்பந்தங்கள் போல ஏனையோர் துன்பந்தரினும் சினஞ் சீறும் செயல்களைத் தவிர்த்தல் நல்லது.§ |
309. § | ஒருவன் வெறுப்புணர்வுகளுக்கு இடங்கொடாது விடின் அவன் விரும்பியன எல்லாம் விரைவில் கை கூடும்.§ |
310. § | எல்லை கடந்த சினமுடையோர் இறந்தோர்க்குச் சமமாதல் போன்று, அதனை அடக்கியவர் முற்றும் துறந்த துறவியைப் போல்வர்.§ |