291. § | வாய்மை எனப்படுவது என்ன? பிறருக்குத் தீய விளைவு சிறிதேனுமிலாச் சொற்களைச் சொல்லுதல் ஆகும்.§ |
292. § | குற்றமற்ற நற்பயன் தருமாயின் பொய்மையும் மெய்மையைப் போல் உண்மையின் பாற்பட்டது எனலாம்.§ |
293. § | உண்மை இல்லை என்று தானறிந்து ஒன்றை மெய் என்று சொல்லற்க. அங்ஙனம் சொல்லின் அவன் மனச்சாட்சியே அவனைச் சுட்டெரித்து விடும்.§ |
294. § | தன் மனச்சாட்சிக்கு மாறாமல் ஒழுகுகின்றவன் உலகத்தார் எல்லோரின் உள்ளத்திலும் நிலைத்து இருப்பான்.§ |
295. § | தன் மனது இசைந்து உண்மையைப் பேசுகின்றவன் தானமும் தவமும் செய்தாரிலும் மேம்படுவான்.§ |
296. § | பொய்யாமைக்கு மேலாகப் பெருமையில் சிறந்தது வேறில்லை. மற்ற அறவொழுக்கம் யாவும் முயற்சியின்றி வாய்மையிலிருந்தே தோன்றும்.§ |
297. § | பொய்மையாமை இன்றியும் மெய்மையையே மட்டும் கடைப்பிடித்தல் ஏனை அறவொழுக்கங்களை மேற்கொள்ளாத அல்லது மேற்கொள்ள இயலாத மக்களுக்கு நன்மை பயக்கும்.§ |
298. § | உடம்பின் புறம் தண்ணீரினால் சுத்தமாகும். ஆனால் உள்ளம் வாய்மையினால் மட்டும் புனிதமாகும்.§ |
299. § | இருளைப் போக்கும் விளக்கெல்லாம் விளக்கல்ல. பொய்யாமையே கற்றறிந்தோரின் விளக்கு.§ |
300. § | நாமறிந்த உண்மை நெறிகள் யாவற்றுள்ளும் வாய்மை பேசும் தரும நெறிக்கு உயர்ந்தது வேறொன்றுமே இல்லை.§ |