231. § | இல்லாதவர்க்கு உதவி புரிந்து புகழ் வளர வாழ்க. வாழ்வில் அதனிலும் கூடிய பலன் தருவது எதுவுமில்லை.§ |
232. § | இரந்து வரும் வறியோர் மடியில் பிச்சை இடுபவரையே பலன் விரித்துரைப்போர் மெச்சிப் பாராட்டுவர்.§ |
233. § | பிறர் மெச்சும் புகழ் குன்றாது என்றென்றும் நிலைத்து நிற்பதைத் தவிர இவ்வுலகில் அழியாதது வேறு ஒன்றுமில்லை.§ |
234. § | இவ்வுலகிலே மனிதர் நற் புகழ் பெற்றிருந்தால் தேவருலகும் அவர்களையன்றி முனிவர்களைப் போற்றாதுவிடும்.§ |
235. § | செல்வம் இழந்தாலும் நற்பயன் அடைவதும், மரணமடைந்தும் அழிவில்லா நற்புகழ் அமைவதும் அறிவில் சிறந்தோர்க்கு மட்டுமே கிட்டும்.§ |
236. § | பிறப்பதெனில் ஒருவன் புகழுடன் உலகில் தோன்றுக. அவ்வாறு முடியாதார் பிறக்காமல் இருப்பதே நன்று.§ |
237. § | புகழ் பெற வாழத் தெரியாதவர் அது தம் குற்றம் என்று உணராது தம்மை இகழ்வார் மேல் குற்றங் காண்பதேன்.§ |
238. § | இறந்த பின்னும் நிலைக்கும் புகழைச் சிறிதேனும் பெறாதவர் உலகிற்கே இகழ்ச்சி எனக் கருதப்படுவர்.§ |
239. § | புகழ் படைக்கா மனிதரைத் தாங்க வேண்டியிருப்பின் குறை இல்லாதப் பலன்தரும் நில விளைவும் குன்றும்.§ |
240. § | பழிச்சொல்லின்றி வாழ்பவரே உண்மையில் வாழ்பவராவார். புகழ் இன்றி வாழ்பவர் வாழாதவரே ஆவார்.§ |