181. § | ஒருவன் அறச் செயல்கள் செய்யாது தீச்செயல்களைச் செய்பவனாயினும் புறங்கூறாது விடின் அவனை இன்னும் நல்லவன் எனலாம்.§ |
182. § | அறநெறியை மீறித் தீச் செயல் புரிவதைவிட பழிச் சொல் கூறிப் பின் நேர்முகங் காணும் போது புன்னகை புரிதல் இழிவானதாகும்.§ |
183. § | புறங்கூறிப் பாசாங்கு செய்து பிறரை இகழ்வோர் வாழ்தலினும் இறத்தலே பயன் தரும் என அறநூல் கூறும்.§ |
184. § | ஒருவன் முன் நின்று குறை கூறினும் அவன் பின் நின்று பின்விளைவு கருதாது பழி சொல்வதைத் தவிர்த்து விடுக.§ |
185. § | ஒருவனுடைய ஒவ்வொரு சொல்லும் இனியதாய் அறநெறிப்பட்டதாயினும் அற்பமான புறங்கூற்று அவனுடைய இழிவான உள்ளத்தைக் காட்டிவிடும்.§ |
186. § | மற்றையோரின் குறைகூறி வதந்தி பரப்புவானின் கேவலச் செயல் வெளிப்பட்டு எங்கும் பரவும்.§ |
187. § | உல்லாசமாக உரையாடி நட்பு வளர்க்கும் கலை தெரியாதவர்கள் பிளவு படுத்தும் நச்சுக்கதை சொல்லி நண்பர்களையும் பகைத்து விடுவர்.§ |
188. § | நண்பர் குறைகளையே எங்கணும் பரப்பும் மனப்பான்மையினர் மற்றையோர்க்கு எத்துணை துன்பம் விளைவிப்பர்.§ |
189. § | ஒருவன் சென்ற பின் பழி சொல்பவனின் பாரம் தாங்கும் பூமாதேவி அதனைப் பொறுத்தலும் அறநெறி எனக் கொள்கிறாள் போலும்.§ |
190. § | பிறர் குற்றங் காண்பது போல் தம் குற்றம் உணருவாராயின் மனிதர்க்கு யாது தீமையும் விளையுமோ?§ |