171. § | பிறன்பொருளைத் தீயவழியில் பெற இச்சிப்பவன் தன்குடும்ப நன்மைகளை இழப்பதோடு குற்றம் இழைத்தவனுமாவான்.§ |
172. § | நடுவுநிலைமை தவறலை வெட்கத்துக்குரியதாகக் கருதுவோர் பண ஆசை தரும் தீச்செயல்களைச் செய்யார். § |
173. § | பேரின்பம் பெறவிரும்புவோர் நிலைபெறா இன்பம் விரும்பி அதனால் விளையும் அதர்மச் செயல்களைச் செய்யார்.§ |
174. § | ஐம்புல ஆசைகளை வென்று மாசில்லா அறிவுடையவர் வறுமையிலும் பிறர் பொருளை விரும்பார்.§ |
175. § | நூணுக்கமாகப் படித்துப் பரந்த அறிவு பெற்றவரும் பிறர் பொருளைப் பேராசைப்பட்டுக் கவர்ந்தால் அவ்வறிவாற் பயனென்ன?§ |
176. § | அருள் பெற விரும்பி நல்வழியில் ஒழுகுகின்றவன் பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டால் ஐயமின்றி அழிந்து படுவான்.§ |
177. § | பேராசையினால் பிறர்பொருளைக் கவர எண்ணற்க. ஏனெனில் கவர்ந்தபொருளை அனுபவிக்குங்கால் உண்டாகும் விளைவு துன்பந் தரும்.§ |
178. § | தன் கைப்பொருளை அழிந்துவிடாமல் காப்பாற்றுவதாயின் பிறர் பொருளில் ஆசைப்படா திருத்தல் வேண்டும்.§ |
179. § | பிறர் பொருளை விரும்புதல் அழிவு தரும் என்று அறிந்த அவாவில்லாதாரை அவர் தரமறிந்து திருமகளும் தானே அவரை அணுகுவாள்.§ |
180. § | பலாபலனைச் சிந்திக்காமல் பிறர்பொருளை விரும்புதல் அழிவு தரும். அன்றி அதனை விரும்பாது விடல் வெற்றி ஈனும்.§ |