161. § | பிறன் நல்வாழ்வு கண்டு பொறாமை கொள்ளாப் பண்பு அறவொழுக்கத்திலும் குறைந்ததன்று என மதிக்கப்படல் வேண்டும்.§ |
162. § | மக்கள் திரட்டும் பெறும் பேறுகள் யாவற்றிலும் யார்மாட்டும் அழுக்காறில்லாத பண்பே தலை சிறந்தது.§ |
163. § | மற்றவர் செல்வச் செழிப்பைக் கண்டு களிப்புதற்குப் பதில் பொறாமைப் படுபவன், தான் செல்வனாயும் அறவோனாயும் வாழ விரும்பாதவன் எனப்படுவான்.§ |
164. § | பொறாமையினால் வரும் அவமானத்தைச் சரிவர அறிந்தால் தீச்செயல் செய்வதற்கு ஒருபோதும் பொறாமை எதுவாகாது.§ |
165. § | ஒருவனின் பொறாமையே அவன் அழிவை உருவாக்கப் போதுமானது வேறு பகைவர் தேவையில்லை.§ |
166. § | ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனின் சுற்றம் உண்ணவும் உடுக்கவும் வழியின்றிக் கெட்டழியும்.§ |
167. § | பிறர் செல்வச் செழிப்பைப் பொறுக்க இயலாதவர்களைக் காணும் சீதேவி அன்னாரைத் தனது மூத்தவளான மூதேவிக்குக் காட்டி நீங்கி விடும்.§ |
168. § | பொறாமை என்னும் பாவி இவ்வுலகச் செல்வத்தை அழித்து மனிதரை நரகத் தீக்குழிக்கு அனுப்பி விடும்.§ |
169. § | நல்ல மனிதர் வறியவராயும் பொறாமை கொண்டோர் செல்வராயும் இவ்வுலகில் இருப்பதற்கான காரணம் ஆராயத் தகும்.§ |
170. § | அழுக்காறுடையார் பெருமையில் உயர்ந்ததுமில்லை. பொறாமை இல்லாதோர் எவரும் வாழ்வில் தாழ்ந்ததுமில்லை.§ |