141. § | அறநெறி முறைமையையும் மணவாழ்வின் உரிமைகளையும் அறிந்தவர்கள் பிறன் மனையாளை விரும்பும் பேதைமைக்கு ஆளாகார்.§ |
142. § | தர்ம வழியினின்றும் தவறி வாழ்வாருள் பிறன்மனை வாயில் முன் காம வேட்கையோடு காத்து நிற்பவனிலும் முழு மூடன் வேறில்லை.§ |
143. § | நண்பனின் மனைவியை விரும்பும் தீச்செயல் செய்பவன் உயிருடன் இருப்பினும் உயிர் நீத்தவன் போல் ஆவான்.§ |
144. § | திணையளவும் ஆராயாது பிறன் மனையாளை நாடும் தவறு செய்பவன் மற்று எத்துணை பெருமை வாய்த்தவனாயினும் பயனென்ன?§ |
145. § | பிறன் மனையாளை இலகுவில் அணையும் தீச்செயலுக்குள்ளாகுவான் என்றும் அழிந்து விடாத அவமானத்துக்கு ஆளாவான்.§ |
146. § | பகை, பாவம், அச்சம், பழி என்பன நான்கும் விபசாரம் செய்வானைத் தப்ப விடாமல் தொடரும்.§ |
147. § | அயலான் மனையாளின் பெண்மையை நாடாதவன் தகுந்த இல்வாழ்வான் எனக் கொள்ளப்படுவான்.§ |
148. § | பிறன் மனையாளை நாடாப் பேராண்மை அறம் மட்டுமன்று அது தலைசிறந்த ஒழுக்கமுமாகும்.§ |
149. § | பிறன் மனையாளை அணைக்க விரும்பும் எண்ணம் கொள்ளாதவனே பெருங்கடல் சூழ் உலகில் உயர்சிறப்புக்கு உரியனாவான்.§ |
150. § | ஒருவன் அறத்தை மறந்து அதர்மமே செய்பவனாயினும் பிறன் மனையாளின் பெண்மையை விரும்பாமை நன்று.§ |