121. § | தன்னடக்கம் ஒருவனைத் தேவருள் ஒருவனாக உயர்த்திவிடும், அடக்கமின்மை அவனைக் கடும் தீய இருளில் தள்ளிவிடும்.§ |
122. § | தன்னடக்கத்திலும் சிறந்த செல்வம் வேறில்லை என்பதால் அதனைப் பெறுதற்கரிய பேறாகக் கருதிக் காக்கவேண்டும்.§ |
123. § | தன்னடக்கம் அறிந்து அவ்வழி செயலாற்றுவான் பேரறிஞரால்கண்ணியவானாய்க் கொள்ளப்பட்டுச் சிறப்படைவான்.§ |
124. § | இல்லற நிலையிற் தன்னடக்கம் பெயராதவன் மாட்சி மலையினும் மிகப் பெரியது.§ |
125. § | பணிவுடைமை எல்லோர்க்கும் விலைமதிப்பற்ற குணமாகும். எனினும் செல்வந்தர்களுக்கு அரியதொரு பெரும் பேறாகும்.§ |
126. § | ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்புலன் அடக்கி வாழ்வரேல் எழு பிறப்பிலும் பாதுகாப்பாய் அமையும்.§ |
127. § | எவரும் பேசுங்கால் நாவைக் காத்து அடக்கி கொள்க தவறின் தகாத சொற்கள் துயருந் துன்பமும் தரும்.§ |
128. § | பேசும் வழக்கில் ஒரு சொல் தீயதாகி விட்டாலும் நல்லன யாவும் அல்லனவாகி விடும்.§ |
129. § | தீயினாற் சுட்டபுண் சில நாளில் ஆறி விடும். ஆயினும் சுடுசொல்லால் விளையும் வடு என்றுமே ஆறாது.§ |
130. § | கற்பன கற்று வெகுளியை அடக்கி ஆளுபவன் விண்ணுலகம் வரும் வழியில் வரவேற்க அறக்கடவுள் காத்திருக்கும்.§ |