101. § | கைம்மாறு கருதாமல் செய்யும் உதவிக்கு விண்ணுலகும் மண்ணுலகும் அளித்தாலும் அதற்குச் சிறிதும் ஈடாகா.§ |
102. § | உரிய தருணத்தில் செய்யப்படும் நன்றி சிறிதெனினம் அஃது எல்லா உலகினும் மேலானதாக மதிக்கப்படும்.§ |
103. § | பயன் கருதாமல், பெறுபவரின் தேவையைப் பொறுத்துச் செய்யும் உதவியின் நன்மை கடலினும் பெரியதாகும்.§ |
104. § | தினையளவு சிறிய உதவி ஒருவர் செய்யினும் அறிவறிந்த மக்கள் அதனை உயர்ந்த பனையளவு பெரிதாகக் கருதுவர்.§ |
105. § | ஒருவர் செய்த உதவி அதன் அளவைப் பொறுத்ததன்று, அவ்வுதவி பெற்றவரின் பண்பின் அளவினதாகும்.§ |
106. § | களங்கமில்லார் நட்பு மறவாதே. துன்பமுற்று போது உறுதுணையாய் நின்றாரின் நட்பைக் கைவிடாதே.§ |
107. § | நன்றி உணர்வுடையார் தமக்குற்ற துன்பமும் துயரும் நீக்கியாரை ஏழு பிறப்பிலும் ஏழு உடலில் நினைவு கொள்வர்.§ |
108. § | செய்ந்நன்றி மறப்பது முறையன்று. ஆனால் மற்றவர் செய்த தீமையை அக்கணமே மறத்தல் நன்று.§ |
109. § | ஒருவன் கொலை அளவு பெருங்குற்றம் செய்யினும் அவன் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைக்க அக்குற்றமும் மறையும்.§ |
110. § | ஒருவன் எவ்வகை நன்றியை மறந்தாலும் மீட்சி கிட்டும். ஆனால் செய்நன்றி மறந்தவனுக்கு உய்வேயில்லை.§ |