91. § | உண்மை உணர்ந்த அறவோர் வாயில் மனங் குழைந்து வஞ்சனை இல்லாத இனிய சொற்கள் வரும்.§ |
92. § | மனமகிழ்வுடன் கொடுக்கும் அன்பளிப்புகளிலும் உள்ளக்களிப்புடன் முகம் மலர்ந்து வழங்கும் இன்சொற்களே மிகவும் சிறந்தன.§ |
93. § | முகம் மலர்ந்து அன்போடு நோக்கி உளங்கனிய இனிய சொற்களால் உரையாடலே அறம் காட்டும் வழியாகும்.§ |
94. § | காண்போர் எவர்க்கும் மகிழ்விக்கும் சொல் வழங்குவார்க்கு வறுமையால் வரும் துன்பம் சாராது.§ |
95. § | பணிவும் இன்சொலும் காட்டுதல் ஒருவர்க்கு அணி, மற்று எவையும் அணியல்ல.§ |
96. § | நற்செயல் நோக்கி இன் சொல் கூறுபவனுக்கு அறம் பெருகும், மறம் தேயும்.§ |
97. § | நன்மை பயப்பதாய் பண்பின் நீங்காச் சொல் தெய்வீக அருளும் தலைசிறந்த அறநிலையும் தரும்.§ |
98. § | அற்பகுணம் சிறிதும் சாரா இனிய சொற்கள் இப்பிறவியில் மட்டுமன்றி மறுபிறவியிலும் இன்பம் தரும்.§ |
99. § | இன்சொல் இனிமை பயப்பது கண்டும் ஒருவன் கடும் சொல் வழங்குவது ஏனோ?§ |
100. § | இனிய சொல் பல இருக்கக் கடும் சொல் கூறல் கனிந்த பழம் கைமேலிருக்க கனியாக் காய் பறித்து உண்பது போல் ஆகும்.§ |