61. § | ஒருவனுக்கு அரும் பேறாக வாய்ப்பது அறிவிற் சிறந்த மக்களே அப்பேற்றிலுஞ் சிறந்ததை நாம் அறிந்ததில்லை.§ |
62. § | பழி சேராப் பண்பு மிக்க பாலகரைப் பெறுவோர் ஏழு பிறவியிலும் பழி தீண்டப் பெறாதவராவர்.§ |
63. § | குழந்தைகளே ஒருவனுக்கு உண்மையான செல்வமாம் அம்மக்கள் அவரவர் ஊழ் வினைக் கேற்பவே வந்து வாய்ப்பர்.§ |
64. § | தம் குழந்தைகள் சிறு கையாற் பிசைந்து கூழ் தேவாமிர்தத்தினும் மிக இனியவாகக் கொள்ளப்படும். § |
65. § | தம் குழந்தைகள் தம் மேனி தீண்டுவது உடற் கின்பம். அவர்கள் மழலைச் சொற் கேட்பது செவிக்கின்பம்.§ |
66. § | தம் குழந்தைகளின் மழலை மொழி கேட்டு அனுபவியாதவரே புல்லாங் குழலோசையும் யாழ் இசையும் இனியவை என்பர். § |
67. § | தன் மகன் கற்றோர் அவையில் முன்வரிசையில் இருக்கத் தகுந்த கல்விமானாகச் செய்தலே மகனுக்குத் தந்தை செய்யும் கடமையாகும். § |
68. § | தம்மிலும் தம்மக்கள் அறிவாளிகளென விளங்குவது கண்டு எம் மக்களும் எங்கும் மகிழ்வர். § |
69. § | தன் மகன் கற்றுத்தேர்ந்து சான்றோனாயினான் எனக்கேட்ட தாய் அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்வாள்.§ |
70. § | "இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ இவன் தந்தை?" என உலகம் கேட்கச் செய்வதே மகன் தந்தைக்குச் செய்யும் பெருங் கடமையாகும்.§ |