51. § | மனை ஒழுக்க நெறியில் நிறைவுடையவளாய் கணவன் வருவாய்க்குத் தகச் செலவு செய்பவளே அவனுக்கு வாய்த்த வாழ்க்கைத் துணையாவாள்.§ |
52. § | குடும்பத்து உயர்பண்புகள் மனைவியிடம் இல்லையேல் வேறு சிறப்பு இருப்பினும் அது வெற்று வாழ்க்கையேயாம்.§ |
53. § | மனையாள் குணநல மாண்புடையவளாயின் கணவனுக்கு இல்லாதது எது? அவள் மதிப்பிற் குன்றின் அவனிடம் உள்ளது எது?§ |
54. § | வியத்தகு கற்பெனும் திண்மை பேணும் பெண்ணிலும் உன்னதமானது எது?§ |
55. § | வேறு கடவுளையன்றி கணவனையே வணங்கித் துயிலெழும் பெண்ணின் ஆணைக்கு மேகமும் அடங்கி உடன் மழை பொழியும்.§ |
56. § | தன்னைக் காத்துத் தன்னை மணந்தவனைப் பேணி தன் குடும்பத்தின் மாசறு புகழைக் காப்பவளே பெண் எனத்தக்காள்.§ |
57. § | பெண்ணை வீட்டுள் வைத்துக் காப்பதேன்? பெண்ணின் உறுதியான கற்பே அவளுக்குத் தலைசிறந்த காவலாகும்.§ |
58. § | தன்னை மணந்த கணவனில் பக்தி பூண்டவள் தேவர் விரும்பி வாழ் உலகில் பெரும் சிறப்புப் பெறுவதற்காளாவாள்.§ |
59. § | குடும்பச் சிறப்பைப் போற்றி வாழும் மனைவி இல்லாத கணவன் தன்னை நகையாட விரும்புவார் முன் சிங்கம் போல் வீர நடை போட முடியாது.§ |
60. § | தகுந்த மனைவி வீட்டுக்கு மங்கலமாவாள், அவள் வளர்க்கும் குழந்தைகள் விலை மதிக்க முதியாத குடும்ப அணிகலன்களாவர்.§ |