41. § | நல்வழியில் நிற்கும் மாணவர், முதியோர், துறவியர் என்ற மூவரையும் ஆதரிப்போனே இல்வாழ்வான் எனப்படுவான்.§ |
42. § | துறவியர், மூதாதையர், வறியோர் என்னும் முத்திறத்தாரின் தேவைகளை அறவழி ஒழுகும் இல்வாழ்வான் ஆதரிப்பான்.§ |
43. § | பிதிரர், தெய்வம் ,விருந்தினர், உறவினர், தான் என்னும் ஐந்திறத்தாரையும் பேணுதலே இல்வாழ்வின் தலையாய கடன்.§ |
44. § | பழிக்குப் பயந்து பொருளீட்டியும் கஞ்சத்தனமின்றிப் பகிர்ந்தும் உண்பானுடைய செழிப்பு என்றும் குன்றாது.§ |
45. § | இல்வாழ்வில் அன்பும் அறனும் குழைந்திருப்பின் அதுவே அதன் சத்தும் கனியுமாகும்.§ |
46. § | இல்லற கடமைகளில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் துறவறம் பூண்டு பெறுவதற்கு வேறு யாது உளது ?§ |
47. § | இல்வாழ்க்கை வாழ்வாங்கு வாழ்வாரே வீடுபெற முயல்வாருள் தலையாயர் ஆவார்.§ |
48. § | இல்லறக் கடமைகளில் ஈடுபட்டுத் துறவியரைத் தவவழியிற் செல்ல உதவுபவன் அத்துறவியரிலும் அதிகம் சகித்துக் கொள்கிறான்.§ |
49. § | அறவாழ்வு என்பது இல்லற வாழ்வினையே. அதுபோல் துறவறமும் பிறர் பழிப்பில்லதாயின் நல்லதேயாம்.§ |
50. § | இல்வாழ்வை இம் மண்ணில் நலம்பட நடத்துபவர் விண்ணில் வாழுந் தேவருக்குச் சமமாகப் போற்றப்படுவார்.§ |