1. § | "அ" என்பது ஏனை எழுத்துக்களுக்கு முதலும் மூலமும் ஆம். |
2. § | முற்றறிவே வடிவான இறைவனுடைய பாதங்களை வழிபட இட்டுச் செல்லாத கல்வியால் பயனென்ன?§ |
3. § | உள்ளக் கமலத்தே எழுந்தருளியுள்ள இறைவனின் புனித பாதங்களை மனத்தால் சார்வோர் பூமியில் நீடுழிவாழ்வர்.§ |
4. § | விருப்பு வெறுப்பற்றான் பாதம் நண்ணி உலகில் துன்பமின்றி வாழ்க.§ |
5. § | விகாரமற்ற இறைவனுடைய மகிமையைப் போற்றுவோர்களை மாயை வழிவரும் நல்வினை தீவினைகள் சாரமாட்டா.§ |
6. § | புலனைந்தும் அடக்கி ஆளுகின்ற இறைவனின் நல்வழியை உறுதியாகப் பற்றுபவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்வர்.§ |
7. § | ஒப்புயர்வற்ற இறைவனின் பாதங்களைச் சரண் அடைந்தவரே மனக் கவலையற்று வாழ்வர்.§ |
8. § | அறக்கடலாகிய கருணைவள்ளலின் திருப்பாதங்களைச் சரணடைந்தவரே வாழ்வின் பிற துன்பக் கடல்களையும் கடக்க வல்லார்.§ |
9. § | எண்குணத்தான் திருப்பாதங்களை வணங்காதார் தலை, புலனறிவிழந்த ஐம்பொறிகளைப் போல் பயனற்றது.§ |
10. § | இறைவனுடைய திருப்பாதங்களைச் சேர்ந்தவரே பிறவி எனும் பெருங் கடலை நீந்துவர், சேராதார் நீந்தார்.§ |